Latestமலேசியா

சபாவில் துயரம்: முதலை தாக்கி ஆற்றுக்குள் இழுத்துச் செல்லப்பட்ட 12 வயது சிறுவன் பலி

லாஹாட் டத்து, ஜூன்-30-சபா, லாஹாட் டத்துவில், 12 வயது சிறுவன் ஒருவன் முதலையால் ஆற்றில் இழுத்துச் செல்லப்பட்டுக் கொடூரமான முறையில் உயிரிழந்துள்ளான்.

​நேற்று மதியம் Kampung Tagupi-வில் உள்ள ஆற்றில் இந்த அதிர்ச்சிச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஆற்றிற்கு அருகில் இருந்த அந்தச் சிறுவனை முதலை திடீரென தாக்கி ஆற்றுக்குள் இழுத்துச் சென்றதாகப் போலீஸ் கூறியது.

​சம்பவத்தைத் தொடர்ந்து, சிறுவனின் குடும்பத்தினரும் பொது மக்களும் உடனடியாகத் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

தீவிரத் தேடுதலுக்குப் பிறகு, பிற்பகல் 2 மணியளவில் சிறுவனின் உடல் ஆற்றில் இருந்து மீட்கப்பட்டது.

​மருத்துவப் பரிசோதனையில் சிறுவனின் உடலில் முதலையின் பலத்த கடி அடையாளங்கள் இருப்பது உறுதிச் செய்யப்பட்டுள்ளது.

இந்தத் துயரச் சம்பவத்தை அடுத்து, போலீஸார் இச்சம்பவத்தை திடீர் மரணம் என வகைப்படுத்தி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!