Latestமலேசியா

மாணவர்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு; சிலாங்கூரில் பள்ளி உணவகம் 14 நாட்கள் மூட சுகாதாரத்துறை அதிரடி உத்தரவு

காஜாங், ஜூலை-1-சிலாங்கூர் காஜாங், சுங்கை ராமாலில் உள்ள ஒரு பள்ளி சிற்றுண்டிச் சாலையில் உணவு உட்கொண்ட சில மாணவர்களுக்கு திடீர் வாந்தி மற்றும் வயிற்று வலி ஏற்பட்டதைத் தொடர்ந்து, சிற்றுண்டிச்சாலையை 14 நாட்களுக்கு மூடுமாறு சுகாதார அதிகாரிகள் அதிரடி உத்தரவிட்டுள்ளனர்.

நச்சுணவுப் பாதிப்புக் காரணமாக இச்சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும் வேளை, 1983-ஆம் ஆண்டு உணவுச் சட்டத்தின் கீழ் இந்த தற்காலிக மூடல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட வளாகத்தில் முழுமையான துப்புரவுப் பணிகளும் முறையான விசாரணைகளும் மேற்கொள்ளவதே இதன் நோக்கமாகும்..

பாதிக்கப்பட்ட ஒரு மாணவரின் தாய் Threads சமூக ஊடகத்தில் இது குறித்து பதிவிட்டுள்ளார்.

சிற்றுண்டிச் சாலை மூடப்பட்ட தகவல் அடங்கிய நோட்டீஸ் ஒட்டப்பட்ட படமும் வைரலாகி வருகிறது.

சிற்றுண்டிச் சாலையில் விற்கப்பட்ட மாட்டிறைச்சி சம்பல் மிகவும் காரமாக இருந்ததாக சில மாணவர்களை மேற்கோள்காட் காட்டி செய்தி வெளியா நிலையில், மேலும் சிலர் அந்த உணவில் கெட்டுப் போன வாடை அடித்ததாகவும் கூறினர்.

இருப்பினும், இச்சம்பவத்திற்கான உண்மையான காரணம் குறித்து இதுவரை பள்ளி நிர்வாகமோ அல்லது சிலாங்கூர் மாநில சுகாதார இலாகாவோ அதிகாரப்பூர்வ அறிக்கைய இன்னும் வெளியிடவில்லை.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!