Latestவிளையாட்டு
உலகக் கிண்ணக் கால்பந்து: நோர்வேயை 2-1 என வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து

மயாமி, ஜூலை-12 – 2026 உலகக் கிண்ணக் கால்பந்துப் போட்டியின் காலிறுதி ஆட்டத்தில், நோர்வே அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இங்கிலாந்து அரையிறுதிக்குத் தகுதிப் பெற்றுள்ளது.
அமெரிக்காவின் மயாமியில் கூடுதல் நேரம் வரை சென்ற இந்த பரபரப்பான ஆட்டத்தில், இங்கிலாந்தின் 2 கோல்களையும் Jude Bellingham போட்டார்.
நோர்வே ஆட்டத்தைச் சமப்படுத்த எவ்வளவோ முயன்றும் இயலாமல் போனது.
இந்த வெற்றியின் மூலம், உலகக் கிண்ணத்தை வெல்லும் முனைப்பில் உள்ள இங்கிலாந்து அணி, 2018-க்குப் பிறகு இரண்டாவது முறையாக அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது.
அரையிறுதியில் இங்கிலாந்து, அர்ஜேண்டினா அல்லது சுவிட்சர்லாந்தைச் சந்திக்கும்.



