Latestசிங்கப்பூர்

சிங்கப்பூர் அமைச்சர்களுக்கு அவதூறு இழப்பீடு வழங்க Bloomberg க்கிற்கு உத்தரவு

 

சிங்கப்பூர், ஜூலை.15- ஆடம்பர சொத்து ஒப்பந்தங்கள் குறித்த செய்தியொன்று தொடர்பான அவதூறு வழக்கில், சிங்கப்பூரின் இரு மூத்த அமைச்சர்களுக்கு இழப்பீடு வழங்க Bloomberg செய்தி நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சர் கே.சண்முகத்துக்கும் மனித வள அமைச்சர் Tan See Lengங்குக்கும் தலா S$230,000 டாலர் வழங்குமாறு சிங்கப்பூர் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அச்செய்தி நிறுவனத்தின்அக்கட்டுரை, அவ்விரு அமைச்சர்களையும் அவமதிப்பதாக இருப்பதாக நீதிமன்றம் கூறியது. இவ்வேளையில் அத்தீர்ப்பு ஏமாற்றமளிப்பதாக Bloomberg தலைமை நிருபர் தெரிவித்துள்ளார். எனினும் அத்தீர்ப்புக்கு மதிப்பளிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

 

‘Singapore Mansion Deals Are Incresingly Shrounded in Secrecy’ எனும் தலைப்பிலான கட்டுரை, தங்களின் பெயருக்குக் களங்கம் விளைவிப்பதாகக் கூறி உள்துறை அமைச்சர் கே. சண்முகமும் மனிதவள அமைச்சர் Tan See Lengங்கும் அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட அச்செய்தி நிறுவனத்திற்கும் அதன் நிருபர் Low De Weiக்கும் எதிராக ஜனவரி 2025-ல் அவ்வழக்கத்தைத் தொடுத்தனர். அக்கட்டுரை, உயர் ரக வீடுகளைப் பற்றிய பல கொள்முதல்களுக்கு சட்டப்பூர்வ ஆவணங்கள் இல்லாததால், அந்த ஒப்பந்தங்களைக் கண்காணிப்பது கடினமாகியுள்ளதாகக் குறிப்பிட்டிருந்தது.

இதற்கு முன் 2023 ஆம் ஆண்டு அமைச்சர் சண்முகமும் மற்றும் மற்றொரு அரசியல்வாதியான வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனும் விலையுயர்ந்த பங்களாக்களை வாடகைக்கு எடுத்ததாக பரவலாகப் பேசப்பட்டது. விசாரணைக்குப் பிறகு, அரசாங்கம் அவர்களை எந்தத் தவறும் செய்யவில்லை என்று விடுவித்ததுடன், வீடுகளை வாடகைக்கு விடுவதற்காக அவர்கள் தங்கள் பதவியைத் தவறாகப் பயன்படுத்தவில்லை என்றும் கூறியது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!