
தமிழ்நாடு, ஜூலை-23- தமிழக முதலமைச்சரும் நடிகருமான விஜய் நடித்த கடைசி திரைப்படமான ‘ஜன நாயகன்’ இன்று உலகம் முழுவதுமுள்ள திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
பல மாதங்கள் தணிக்கைச் சிக்கல்கள் மற்றும் திரைப்பட காட்சிகள் இணையத்தில் கசிந்த சம்பவங்களால் வெளியீடு தாமதமான நிலையில், ரசிகர்கள் நீண்ட காத்திருப்புக்குப் பிறகு படத்தை உற்சாகமாக வரவேற்றுள்ளனர்.
இந்தப் படத்தின் முதல் வெளியீட்டு தேதி ஜனவரியில் அறிவிக்கப்பட்டிருந்தாலும், மத்திய திரைப்படத் தணிக்கைக் குழு (CBFC) சான்றிதழ் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் மறுஆய்வுக்குப் பிறகு, ஒன்பது உறுப்பினர்கள் கொண்ட குழு படத்திற்கு ‘A’ சான்றிதழ் வழங்கியுள்ளது.
இதற்கிடையில், விஜயின் தமிழக வெற்றி கழகம் (TVK) கட்சி மாநிலத் தேர்தலில் வெற்றி பெற்று, மே 10-ஆம் தேதி கூட்டணி அரசை அமைத்தது. அரசியலுக்கு முழுமையாக வந்துள்ள விஜயின் 34 ஆண்டுகால திரைப்பயணத்தின் இறுதிப்படமாக ‘ஜன நாயகன்’ பார்க்கப்படுகிறது.
இன்று வெளியான இந்தப் படம், விஜயின் ரசிகர்களுக்கு அவரது திரையுலக வாழ்க்கையின் விடைபெறும் படமாக சிறப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.



