
கோலாலம்பூர், ஜூலை 31 – கோலாலம்பூர் மாநகராட்சி மன்றமான DBKL மேற்கொண்ட சிறப்பு சோதனை நடவடிக்கையின் போது , புடுவில் (Pudu ) சட்டவிரோதமாக இயங்கி வந்த மூன்று மசாஜ் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
இந்த சோதனை, ஜாலான் யூ மற்றும் ஜாலான் துன் ரசாக் பகுதிகளில் இரவு நேரத்தில் மேற்கொள்ளப்பட்டது.
DBKL விசாரணையில், குறித்த வளாகங்கள் செல்லுபடியாகும் வணிக உரிமம் இல்லாமல் இயங்கி வந்ததுடன், மசாஜ் சேவை மற்றும் விபச்சார நடவடிக்கைகள் இடம்பெற்றதாக சந்தேகிக்கப்பட்டது.
இதையடுத்து உள்ளூர் அரசாங்க சட்டத்தின் கீழ் மூன்று வளாகங்களும் உடனடியாக மூடப்பட்டன.
மேலும், அனுமதியின்றி அமைக்கப்பட்ட உள் அறைகள், கழிப்பறைகள் மற்றும் படுக்கை வசதிகள் அகற்றப்பட்டதுடன், சந்தேகத்திற்குரிய பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
DBKL, இதுபோன்ற சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிரான கண்காணிப்பு மற்றும் அமலாக்க நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளது.



