
ஜகார்த்தா, ஆகஸ்ட்-3-இந்தோனேசியாவின் மதுரா தீவு அருகே பயணிகள் படகில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 5 பேர் உயிரிழந்தனர்; 41 பேர் மாயமாகியுள்ளனர்.
Mutiara Sentosa 2 என்ற அந்தப் படகு 271 பயணிகளுடன் சுராபாயாவிலிருந்து மக்காசார் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது நடுவழியில் தீப்பற்றி எரிந்தது.
கப்பலிலிருந்து அடர்ந்த கருப்பு புகை வெளியான நிலையில், உயிர்காக்கும் அங்கிகளை அணிந்த பயணிகள் அலறியடித்துக்கொண்டு தளத்தில் திரண்டனர்.
சிலர் கடலில் குதித்துத் தப்பிக்க முயன்றனர்.
அருகில் இருந்த பிற கப்பல்களின் உதவியுடன் இதுவரை 225 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
மாயமான 41 பேரைத் தேடி மீட்க இந்தோனேசியக் கடற்படை மற்றும் மீட்புக் குழுவினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இத்தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



