
ஜோகூர் பாரு, ஆகஸ்ட்-9,ஜோகூர் பாருவில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு வெளியே நிகழ்ந்த பயங்கர மோதல் வீடியோ சமூக வலைத் தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, 3 ஆடவர்களைப் போலீஸார் கைதுச் செய்துள்ளனர்.
தனிப்பட்ட தகராறு காரணமாகவே இந்த மோதல் வெடித்துள்ளதாகக் நம்பப்படுகிறது.
ஆரம்பகட்ட விசாரணையில், சம்பவத்தின் போது அவர்களில் சிலர் மது அருந்தியிருந்ததும் தெரியவந்துள்ளது.
கைதுக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட பின்னணி சோதனையில், இந்த மூன்று பேருக்கும் சேர்த்து மொத்தம் 25 பழையக் குற்றவியல் மற்றும் போதைப்பொருள் தொடர்பான வழக்குகள் இருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



