Latestமலேசியா

பினாங்கில் வாகனமோட்டிக்கு திடீர் மாரடைப்பு; மோட்டார் சைக்கிள்கள் மீது கார் மோதி பெண் பலி

ஜோர்ஜ்டவுன், ஆகஸ்ட்-14-பினாங்கு, ஜோர்ஜ்டவுனில் கார் ஓட்டிச் சென்றபோது மாரடைப்பு ஏற்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் 36 வயது பெண் ஒருவர் உயிரிழந்தார்.

கட்டுப்பாட்டை இழந்த அவரது வாகனம், சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த இரு மோட்டார் சைக்கிள்கள் மீது மோதியது.​Jalan Macalister சாலையில் உணவகமொன்றின் முன்னால் இச்சம்பவம் நிகழ்ந்தது.

இந்த விபத்து தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த MPV வாகனத்தை அந்தப் பெண் மட்டுமே ஓட்டிச் சென்றதாக தீமோர் லாவோட் மாவட்ட போலீஸ் உறுதிப்படுத்தியது.

மேலும், விபத்தில் சிக்கிய 2 மோட்டார் சைக்கிள்களும் காலியாக, சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்தவை என்றும் அது தெளிவுபடுத்தியது.

சம்பவத்திற்குப் பிறகு உடனடியாக பினாங்கு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அந்தப் பெண், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மரணத்திற்கான சரியான காரணத்தைக் கண்டறிய சவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

1987-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் இச்சம்பவம் குறித்துப் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!