
இந்தியா, ஆகஸ்ட் 19 – கொல்கத்தாவிலுள்ள ஹோட்டல் ஒன்றில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், ஒரு குழந்தை உட்பட குறைந்தது 9 பேர் உயிரிழந்துள்ளனர். அச்சம்பவத்தினால் மேலும் பலர் காயமடைந்ததாக தகவல் வெளிவந்துள்ளது.
மேற்கு வங்க தீயணைப்புத் துறை அதிகாரி கூறுகையில், ஹோட்டல் முழுவதும் அடர்ந்த புகை சூழ்ந்ததால் சிலர் குளியலறைகளில் சிக்கி உயிரிழந்ததாக தெரிவித்தார். ஆரம்பக்கட்ட விசாரணையில், ஹோட்டலில் இருந்த குளிர்சாதனப் பெட்டி வெடித்ததால் தீ ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
தீ விபத்து ஏற்பட்டபோது ஹோட்டலில் சுமார் 60 பேர் இருந்தனர். 6 ஆண்கள், 2 பெண்கள் மற்றும் ஒரு குழந்தை உட்பட 9 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
உயிரிழந்தவர்களில் சிலர் மருத்துவ சிகிச்சைக்காக கொல்கத்தா வந்த வங்கதேசத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாமென தெரிவிக்கப்பட்டுள்ளது.



