
பெய்ஜிங், ஆகஸ்ட்-23 – மனிதனின் அதிவேக ஓட்டப்பந்தய சாதனையை முறியடித்து சீனாவில் உருவாக்கப்பட்ட மனித உருவ ரோபோ (Humanoid Robot) புதிய உலக சாதனையைப் படைத்துள்ளது.
பெய்ஜிங்கில் நடைபெற்ற உலக மனித உருவ ரோபோ விளையாட்டுப் போட்டியில், Tiangong Ultra என்ற ரோபோ, 100 மீட்டர் தூரத்தை வெறும் 9.39 வினாடிகளில் கடந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதன் மூலம், ஜமைக்காவின் புகழ்பெற்ற ஓட்டக்காரர் உசேன் போல்ட் 2009-ஆம் ஆண்டு 9.58 வினாடிகளில் நிலைநாட்டிய வரலாற்றுச் சிறப்புமிக்க உலக சாதனையை இந்த ரோபோ தகர்த்துள்ளது.
பெய்ஜிங் ரோபோ புத்தாக்க மையம் உருவாக்கிய இந்த ரோபோ, பந்தயத்தின் இறுதிக்கட்டத்தில் மற்றொரு ரோபோவான ‘Lightning’-யை முந்திச் சென்று வெற்றி பெற்றது.
9.47 வினாடிகளில் வந்த Lightning ரோபோவும் உசேன் போல்ட்டின் சாதனையை விடக் குறைவான நேரத்திலேயே 100 மீட்டரைக் கடந்தது.
கடந்தாண்டு 21.50 வினாடிகளில் ஓடிய இந்த ரோபோ, ஒரே ஆண்டில் தனது வேகத்தை 12 வினாடிகளுக்கும் மேலாகக் குறைத்து, ரோபோட்டிக்ஸ் துறையின் அதிவேக வளர்ச்சியை உலகிற்குப் பறைசாற்றியுள்ளது.



