Latestமலேசியா

அண்டை வீட்டாருக்கு உதவ முயன்றது குற்றமா? 14வது மாடி பால்கனி விளிம்பில் சிக்கிய ஆடவர் மீட்பு

ஜோர்ஜ்டவுன், ஆகஸ்ட்-23 – பினாங்கு, ஜோர்ஜ்டவுன், ஜாலான் ஜெலுத்தோங்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அண்டை வீட்டாருக்கு உதவ முயன்ற ஆடவரும், அவரோடு சேர்ந்து, 14-ஆவது மாடியின் வெளிப்புற பால்கனி விளிம்பில் சிக்கித் தவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அறை பூட்டப்பட்டதாக நினைத்த 78 வயது முதியவர், பின்பக்க ஜன்னல் வழியாக வெளியேறி, வீட்டின் கதவைத் திறக்க முயன்றார்.

அதில் அவர் தோல்விக் காணவே, பால்கனியிலேயே அமர்ந்து விட்டார்.

இதனை அறிந்த 50 வயது பக்கத்து வீட்டுக்கார ஆடவர், முதியவருக்கு உதவும் நோக்கில், வெளிப்புற பால்கனி வழியாக இறங்கி உள்ளே செல்ல முயன்றார்.

ஆனால், அவரால் உள்ளேயும் செல்ல முடியாமல், மீண்டும் மேலே ஏறவும் முடியாமல் அந்த குறுகிய விளிம்பிலேயே சிக்கிக்கொண்டார்.

இருவரும் அசதியில் அங்கேயே அமர்ந்து விட, பொது மக்கள் அளித்த தகவலின் பேரில் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் உடனடியாகச் சம்பவ இடம் விரைந்தனர்.

கயிறு மூலம் இறங்கும் மீட்பு யுக்தியைப் பயன்படுத்தி இருவரையும் அவர்கள் பத்திரமாக மீட்டனர்.

எந்தவித காயங்களுமின்றி இருவரும் கீழ் தளத்தின் பால்கனிக்கு பாதுகாப்பாகக் கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து, அந்தப் பதற்றமான சூழல் முடிவுக்கு வந்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!