Latestமலேசியா

கெடாவில் பச்சிளம் குழந்தை கடத்தல், விற்பனை முயற்சி முறியடிப்பு; தாய் உட்பட 6 பேர் கைது

குவாலா மூடா, ஆகஸ்ட்-17-கெடா, குவாலா மூடாவில் பிறந்து 5 நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தையை சட்டவிரோதமாக விற்க முயன்ற வழக்கில் குழந்தையின் பெற்றத் தாய் உட்பட 6 பேரைப் போலீஸார் கைதுச் செய்துள்ளனர்.

5 வருடங்களாக பிள்ளை இல்லாத ஒரு தம்பதியும் அவர்களில் அடங்குவர்.

​24 வயது தாய், வேறொரு பெண்ணின் அடையாள அட்டையைப் பயன்படுத்தி தனியார் மருத்துவமனையில் பிரசவம் பார்த்து, குழந்தையில்லாத அந்தத் தம்பதியின் பெயரில் குழந்தையைப் பதிவுச் செய்ய முயன்றதாக கெடா போலீஸ் தலைவர் டத்தோ Adzli Abu Shah தெரிவித்தார்.

இச்சம்பவத்தில்​இடைத்தரகராகச் செயல்பட்ட 37 வயது ஆடவர் ஒருவர், மருத்துவமனை செலவுக்காக 9,000 ரிங்கிட்டும், தாய்க்கு 8,000 ரிங்கிட்டும் வழங்கியதை ஒப்புக் கொண்டுள்ளார்.

​கைதுச் செய்யப்பட்ட 6 பேரும் 11 நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளதோடு, ஆள்கடத்தல் தடுப்புச் சட்டம் மற்றும் சிறார் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

மீட்கப்பட்ட குழந்தை தற்போது சமூக நலத்துறையின் பராமரிப்பில் உள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!