
காட்மண்டு, ஆகஸ்ட்-27,நேபாளத்தின் வடக்கு ரசுவா (Rasuwa) மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி, 17 மலேசியர்கள் உட்பட 579-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.
இதுவரை குறைந்தது 160 பேர் பலியாகியுள்ளானர்.
போட் கோஷி (Bhote Koshi) ஆற்றில் ஏற்பட்ட இந்த வெள்ளப் பெருக்கால் குடியிருப்புகள், சந்தைகள் மற்றும் உள்கட்டமைப்புகள் கடுமையாக சேதமடைந்துள்ளன.
380-க்கும் அதிகமான சுற்றுப் பயணிகள் தொடர்பை இழந்துள்ளதாகவும் நேப்பாள சுற்றுலா வாரியம் தெரிவித்துள்ளது.
காணாமல் போனவர்களில் 17 மலேசியர்கள் தவிர்த்து, 100-க்கும் மேற்பட்ட இந்தியர்கள், 12 பிரிட்டிஷ் நாட்டினர், 4 தென்னாப்பிரிக்கர்கள், 3 அமெரிக்கர்கள் மற்றும் ஆஸ்திரேலியா, நெதர்லாந்தைச் சேர்ந்த தலா ஒருவரும் அடங்குவர்.
கைலாஷ் சென்ற வெளிநாட்டவர்கள் மற்றும் இஷா இயக்கதினர் பலரும் வெள்ளத்தில் சிக்கி காணாமல் போயுள்ளதாக தலவல்கள் தெரிவிக்கின்றன.
திபெத் எல்லைப் பகுதியில் பெரும் சேதத்தை ஏற்படுத்திய இந்த வெள்ளப் பெருக்கில், பேருந்துகள், வாகனங்கள் மற்றும் கட்டடங்கள் அடித்துச் செல்லப்படும் அதிர்ச்சியூட்டும் விடியோக்கள் வெளியாகியுள்ளன.
தலைநகர் காட்மண்டுவில் உள்ள மலேசியத் தூதரகம், அங்குள்ள மீட்புக் குழுக்களுடன் இணைந்து மலேசியர்களின் பாதுகாப்பு நிலவரத்தை தொடர்ந்து கண்காணித்து வருவதாக வெளியுறவு அமைச்சான விஸ்மா புத்ரா உறுதிப்படுத்தியுள்ளது.



