Latestஉலகம்

நேப்பாளத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பெட்டகத்தை உடைத்து லட்சக்கணக்கில் பணத்தைச் சுருட்டிய திருடர்கள்

காட்மண்டு, ஆகஸ்ட்-30,நேப்பாளத்தில் ஏற்பட்ட கோரமான திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் மீட்புப் பணிகள் ஒருபுறம் சோகத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், மறுபுறம் பேரழிவைப் பயன்படுத்தி கொள்ளைச் சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.

​வெள்ளத்தில் வீடுகளும் உடைமைகளும் அடித்துச் செல்லப்பட்ட போது, லட்சக்கணக்கான ரூபாய் அதாவது சுமார் 57 முதல் 58 லட்சம் வரை ரொக்கம் இருந்த பணப் பாதுகாப்புப் பெட்டகம் ஒன்று வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டது.

துயரத்தில் தவித்த மக்களை மீட்கும் பணிகள் ஒருபுறம் இருக்க, அடித்துச் செல்லப்பட்ட அந்தப் பெட்டகத்தைக் கண்ட சில நபர்கள் அதனை உடைத்து உள்ளே இருந்த பணத்தை சுருட்டிக் கொண்டு சென்றுள்ளனர்.

​பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்கள் உணவின்றித் தவிக்கும் வேளையில், இந்தத் திருட்டுச் சம்பவம் பொது மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!