
கோலாலம்பூர், செப்டம்பர் 4: நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்படும் அரசியல் தலைவர்கள் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (MACC) ஆரஞ்சு நிற சீருடையை அணிய வேண்டிய அவசியமில்லை என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
இந்த தளர்வு தொடர்பான தகவல் நேற்று தெரிவிக்கப்பட்டதாகக் கூறிய அன்வார், விசாரணை நடத்துவது அமலாக்க அதிகாரிகளின் பொறுப்பு என்றும், வழக்கு நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட பின்னர் எந்த நிற சீருடை அணிய வேண்டும் என்பதை அதிகாரிகளே தீர்மானிக்கலாம் என்றும் கூறினார்.
விசாரணைக்கு ஒத்துழைக்கும் சிலர் ஆரஞ்சு நிற சீருடையில் அழைத்துச் செல்லப்படுவது வேறுபட்ட கருத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் விளக்கினார்.



