Latestமலேசியா

சரவாக் ஹெலிகாப்டர் விபத்து: பயணித்த 5 பேருமே பலி – போலீஸ் தகவல்

கூச்சிங், செப்டம்பர்-9,சரவாக், உலு பாராமில் உள்ள Long Lellang விமான ஓடுதளத்திற்கு அருகே விபத்துக்குள்ளான Bell 206 L4 இரக ஹெலிகாப்டரில் பயணித்த 5 பேருமே உயிரிழந்து விட்டதாகச் சரவாக் மாநிலப் போலீஸ் உறுதிப்படுத்தியுள்ளது.

நேற்று பிற்பகலில் சம்பவ இடம் சென்றடைந்த தேடுதல் மற்றும் மீட்புக் குழுவினர், ஹெலிகாப்டரின் எஞ்சிய பாகங்களையும் அதில் பயணித்தவர்களின் சடலங்களையும் மீட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்களில் விமானி, மருத்துவர், 2 தாதியர்கள் மற்றும் ஒரு மருத்துவ உதவியாளர் ஆகியோர் அடங்குவர்.

அவர்களில் அந்த மருத்துவர் கிளந்தானைச் சேர்ந்த Dr Ainul Baroah Kamaruddin என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

Long Lellang மருத்துவமனையிலிருந்து மீரி மருத்துவமனைக்கு நோயாளியைக் கொண்டு சென்றபோது இந்த வான்வழி மருத்துவச் சேவை (FDS) ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது.

மீட்புக் குழுவினர் ஹெலிகாப்டர் விழுந்த இடத்தைக் கண்டுபிடித்துள்ள நிலையில், விபத்துக்கான காரணம் குறித்து மலேசியப் பொதுப் போக்குவரத்து ஆணையமான CAAM தீவிர விசாரணை நடத்தி வருகிறது

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!