Latestமலேசியா

நாடு முழுவதும் 57,000 சட்டவிரோத குடியேறிகள் தடுத்து வைப்பு; 1,720 முதலாளிகளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை

கோலாலம்பூர், செப்-21 -ஜனவரி 1 முதல் செப்டம்பர் 17 வரை நாடு முழுவதும் நடத்தப்பட்ட 9,700 நடவடிக்கைகளில், 57,000-க்கும் மேற்பட்ட சட்டவிரோதக் குடியேறிகள் கைது செய்யப்பட்டனர். பல்வேறு குற்றங்களுக்காக அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அதே காலகட்டத்தில் 1,720 முதலாளிகள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதாக குடிநுழைவுத் துறையின் நடவடிக்கை பிரிவு துணைத் தலைமை இயக்குநர் Datuk Lokman Effendi Ramli தெரிவித்தார்.

வெளிநாட்டினரின் வருகை அல்லது அது பற்றி தகவல் அறிந்தவர்கள் குடிநுழைவுத் துறையிடம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்க வேண்டும். சொந்த நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது. அதிகாரிகள் தங்கள் கடமைகளைச் சரியாகச் செயல்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என Lokman Effendi கூறினார்.

இதனிடையே, தேசிய பாதுகாப்பு மன்றம், திரங்கானு சிவில் பாதுகாப்புப் படையுடன் இணைந்து மேற்கொண்ட ‘Op Mega’ நடவடிக்கையில் 133 வெளிநாட்டினர் சோதனை செய்யப்பட்டு, 19 சட்டவிரோதக் குடியேறிகள் தடுத்து வைக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் வங்காளதேசி. 14 பேர் மியன்மார் நாட்டவர்கள். நால்வர் இந்தோனேசியர்கள்.

அங்கீகரிக்கப்படாத இடைத்தரகர்கள் மூலம் நாட்டிற்குள் புதிதாக நுழைந்த ஏழு மியன்மார் பெண்கள் குறித்தும் அந்நடவடிக்கையில் தெரிய வந்தது. இந்நாட்டில் ஏற்கனவே வசித்து வரும் தங்கள் கணவர்களுடன் இணைந்து வாழ அவர்கள் வந்தது கண்டறியப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!