Latestமலேசியா

ஜோர்ஜ்டவுனில் நாயை மோட்டார் சைக்கிளில் இழுத்துச் சென்ற இருவர் மீது விசாரணை

ஜோர்ஜ்டவுன், செப்டம்பர் 24 — பினாங்கு, பத்து லஞ்சாங் (Batu Lancang) பகுதியில் நாயை மோட்டார் சைக்கிளில் கட்டி இழுத்துச் சென்ற இருவர் மீது கால்நடை சேவைகள் துறை விசாரணை நடத்தி வருகிறது.

நேற்று நடந்த இந்தச் சம்பவத்தின் 21 விநாடி காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியது. அதில், இருவர் மோட்டார் சைக்கிளில் ஒரு நாயை இழுத்துச் செல்வது பதிவாகியுள்ளது.

சம்பவத்தைப் பார்த்த பெண் ஒருவர் இருவரையும் நிறுத்துமாறு கேட்டுக்கொண்ட போதிலும், அவர்கள் நாயைத் தொடர்ந்து இழுத்துச் சென்றதாக விலங்குகள் மீட்பாளர் டேவிட் யிம் (David Yim) தெரிவித்தார். நாய்க்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டிருக்கலாமெனவும், பின்னர் இருவரும் மோட்டார் சைக்கிளுடன் அங்கிருந்து சென்றுவிட்டதாகவும் அவர் கூறினார்.

சம்பவம் தொடர்பான புகைப்படம் மற்றும் காணொளியை அந்தப் பெண் வழங்கியதுடன், கால்நடை சேவைகள் துறையிடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. விலங்குகளைத் துன்புறுத்தியதற்கான கூறுகள் உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மீட்பாளர் தரப்பு வலியுறுத்தியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!