
கோத்தா பாரு, செப். 29 – கிளாந்தான் சுல்தான் ஐந்தாம் முகம்மதுவின் 57ஆவது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற அரச விருது வழங்கும் விழாவில், மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணனுக்கு ‘செரி படுக்கா ஜிவா மகோத்தா கிளாந்தான்’ (SJMK) விருது வழங்கப்பட்டது.
1925ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த விருதைப் பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை ரமணன் பெற்றுள்ளார். SJMK விருதைப் பெறுவோரின் எண்ணிக்கை ஒரே நேரத்தில் 50 பேருக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளது.
விருதுக்குப் பின்னர் சுல்தானுக்கு நன்றி தெரிவித்த ரமணன், மக்களுக்கான சேவையை மேலும் அர்ப்பணிப்புடன் தொடர இந்த அங்கீகாரம் தமக்குப் பொறுப்பளிப்பதாகக் கூறினார்.



