Latestமலேசியா

திரெங்கானு சாலையில் படுத்திருந்த பெண், கார் மோதி உயிரிழப்பு

திரெங்கானு, அக்டோபர் 2 – குவாலா திரெங்கானுவில் சாலையின் நடுவே படுத்திருந்த 39 வயதான மாற்றுத்திறனாளிப் பெண் கார் மோதி உயிரிழந்தார்.

இன்று அதிகாலை 1.15 மணியளவில் ஜாலான் ஜம்பாத்தான் சுல்தான் மஹ்மூட் (Jalan Jambatan Sultan Mahmud) பகுதியில் நிகழ்ந்த இவ்விபத்து குறித்து அதிகாலை 2.15 மணிக்கு காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திலேயே பலத்த காயங்களுடன் அந்தப் பெண் உயிரிழந்ததாக குவாலா திரெங்கானு மாவட்ட காவல்துறைத் தலைவர் அஸ்லி முகமட் நூர் (Asisten Komisioner Azli Mohd Noor) தெரிவித்தார்.

முதற்கட்ட விசாரணையின்படி, 28 வயதான ஆண் ஒருவர் ஓட்டிச் சென்ற புரோட்டான் வாஜா கார், கோங் படாக் (Gong Badak) பகுதியிலிருந்து குவாலா பெராங் (Kuala Berang) நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. சாலையின் நடுவே பெண் படுத்திருந்ததை ஓட்டுநர் அருகில் வந்தபோதுதான் கவனித்ததால், காரைத் தவிர்க்க முடியாமல் அவர் மீது மோதியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த பெண்ணின் உடல் மேல் நடவடிக்கைகளுக்காக குவாலா திரெங்கானு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. கார் ஓட்டுநருக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சம்பவம் சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!