Latestமலேசியா

flydubai துணை விமானிக்குப் பாராட்டு; அமெரிக்க, இஸ்ரேலிய விமானங்கள் மீது தாக்குதல் நடத்த அல்-காய்தா அழைப்பு

துபாய், அக்டோபர்-5,துபாயிலிருந்து டெல் அவிஃவ் நோக்கிச் சென்ற flydubai விமானத்தைக் கைப்பற்ற முயன்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட துணை விமானியின் செயலை, பயங்கரவாதக் கட்டமைப்பான அல்-கைடாவின் ஏமன் நாட்டுக் கிளைப் பாராட்டியுள்ளதுடன், இதுபோன்ற மேலும் தாக்குதல்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளது.

Al-Qaeda in the Arabian Peninsula எனப்படும் AQAP-ன் வாராந்திர வெளியீட்டில், செப்டம்பர் 30-ஆம் தேதி flydubai விமானத்தில் நடந்த சம்பவம் குறித்து கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.

அதில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் தொடர்புடைய விமானங்களை இலக்காகக் கொண்டு இதுபோன்ற தாக்குதல்களை நடத்தத் தூண்டும் வகையிலான கருத்துகள் இடம்பெற்றுள்ளன.

flydubai FZ1073 விமானம் துபாயிலிருந்து டெல் அவிஃவ் நோக்கிச் சென்றபோது, ஓமான் நாட்டைச் சேர்ந்த துணை விமானி Hamam al-Hammami, இந்திய விமானி கேப்டன் Smit Machchhar-ரை அவசரத் தேவைக்காக வைக்கப்பட்டிருந்த கோடரியால் தாக்கியுள்ளார்.

அதன் பின்னர் விமானத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற அவர் முயன்றதாகவும் கூறப்படுகிறது.

காயமடைந்த நிலையிலும் கேப்டன் Machchhar, cockpit அறைக் கதவைத் திறந்ததைத் தொடர்ந்து, பயணிகளும் விமானப் பணியாளர்களும் உள்ளே நுழைந்து துணை விமானியைக் கட்டுப்படுத்தினர்.

பின்னர் விமானத்தில் பயணித்த மற்றொரு தகுதிபெற்ற விமானி கட்டுப்பாட்டை ஏற்று, சவூதி அரேபியாவில் விமானத்தைப் பாதுகாப்பாகத் தரையிறக்கினார்.

இதனிடையே, al-Hammami, அல்-கைடாவின் உத்தரவின் பேரில் செயல்பட்டார் என்பதற்கான ஆதாரம் இதுவரை வெளியிடப்படவில்லை.

அவர் தனியாகச் செயல்பட்டிருக்கலாம் என்பதே இஸ்ரேலின் ஆரம்பக்கட்ட கணிப்பாக உள்ள நிலையில், சம்பவத்தின் நோக்கம் மற்றும் பின்னணி குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!