
கோலாலம்பூர், அக்டோபர் 6 – மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு ஆணைய (AKPS) தலைமை இயக்குநர் ஷுஹைலி சைன் (Shuhaily Zain), இரு காவல்துறை அதிகாரிகளைத் தாக்கியதாகக் கூறப்படும் விவகாரத்தில், சிசிடிவி பதிவுகள், சாட்சியங்களின் வாக்குமூலங்கள் உள்ளிட்ட அனைத்து ஆதாரங்களையும் அரசுத் தலைமை வழக்கறிஞர் அலுவலகம் (AGC) ஆய்வு செய்யவுள்ளது.
சட்டத்துறைத் தலைவர் டுசுக்கி மொக்தார் (Dusuki Mokhtar), விசாரணையின் அனைத்து அம்சங்களையும் பரிசீலித்த பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்றார். இந்த வழக்கு குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுகிறது.
இதுவரை காவல்துறை 25 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளது. KLIA தெர்மினல் 1-ல் ஷுஹைலி ஒருவரை எதிர்கொண்டதாகக் காட்டப்படும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து இந்த விவகாரம் கவனம் பெற்றது.
எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு ஆணைய, காட்சிகள் உண்மையானவை என்றும், விமான நிலைய ஆய்வின்போது சம்பவம் நடந்ததாகவும் உறுதிப்படுத்தியுள்ளது.



