
சிப்பாங், அக்-09-இன்று காலை KLIA விரைவுச்சாலையில் கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத் தடுப்பில் மோதியதில், மூவர் பலத்த காயமடைந்தனர்.
அவர்களில் ஒருவர் மலேசியாவைச் சேர்ந்த ஆடவர்.மற்ற இருவர் சீனாவைச் சேர்ந்த பெண்கள் ஆவர்.
மூவரும் பலத்த காயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தகவல் கிடைத்து முன்னதாக KLIA தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த தீயணைப்பு வாகனம் ஒன்று காலை 8.01 மணிக்கு சம்பவ இடத்தைச் சென்றடைந்தது.
ஏழு தீயணைப்பு வீரர்களும் ஒரு தீயணைப்பு மீட்பு வாகனமும் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.அனைத்து நடவடிக்கைகளும் காலை 8.36 மணி வாக்கில் நிறைவடைந்தன.



