Latestமலேசியா

கோலாலம்பூர் மொத்த விற்பனைச் சந்தையில் DBKL அதிரடி சோதனை; வெளிநாட்டு வணிகர்கள் மீது நடவடிக்கை

கோலாலம்பூர், அக்-12–கோலாலம்பூர் மாநகர் மன்றமான DBKL, கோலாலம்பூர் மொத்த விற்பனைச் சந்தை மற்றும் Jalan Selayang Baru பகுதிகளில் ‘Op Tebah’ சோதனை நடவடிக்கையை மேற்கொண்டது. சட்டவிரோதமாக வணிக நடவடிக்கையில் ஈடுபடும் கள்ளக் குடியேறிகளைக் குறி வைத்து அச்சோதனைகள் நடத்தப்பட்டன. அச்சோதனையின்போது, 23 சீல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஒன்பது அறிவிக்கைகளும் வெளியிடப்பட்டன.

செலாயாங் நகராண்மைக் கழகம் (MPS) மேற்கொண்ட ஐந்து அமலாக்க நடவடிக்கைகளில், வெளிநாட்டினர் சேமிப்புக் கிடங்காகப் பயன்படுத்திய சட்டவிரோதக் கட்டமைப்புகள் இடிக்கப்பட்டதுடன், காய்கறிகள் மற்றும் வணிகப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. மூன்று அபராதங்கள் விதிக்கப்பட்டு, மூன்று அறிவிக்கைகளும் வெளியிடப்பட்டன. வணிக வளாகத்தை மூடுவதற்கான அறிவிக்கையும் அவற்றில் அடங்கும்.

                           

இதனிடையே, மலேசிய நிறுவனங்கள் ஆணையம் (SSM) 12 அபராதங்களை விதித்தது. அறிவிப்புப் பலகை வைக்கத் தவறியது, SSM சான்றிதழ் இல்லாதது மற்றும் காலாவதியான வணிகப் பதிவு உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்கள் கண்டறியப்பட்டதாக DBKL தெரிவித்தது. அச்சோதனையை, MPS, கோம்பாக் மாவட்டக் காவல் தலைமையகம் (IPD), SSM மற்றும் சிலாங்கூர் இஸ்லாமிய மத விவகாரத் துறை (JAIS) ஆகியவை இணைந்து மேற்கொண்டன.

கோலாலம்பூர் கூட்டரசு பிரதேசத்தில் உள்ள வணிகப் பகுதிகள் மற்றும் மொத்த விற்பனைச் சந்தைகள் ஒழுங்காகவும் பாதுகாப்பாகவும் இருப்பதை உறுதி செய்ய, ஒருங்கிணைந்த அமலாக்க நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என DBKL தெரிவித்தது. பொதுமக்கள் தங்களது புகார்கள் மற்றும் கருத்துகளை DBKL-க்கு தெரிவிக்கலாம் என்றும் அது கூறியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!