Latestமலேசியா

பேராக்கில் புயல்: 35-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்; தற்காலிக நிவாரண மையம் திறப்பு

ஈப்போ, அக்டோபர்-15,பேராக்கின் லாருட், மாத்தாங் மற்றும் செலாமா மாவட்டங்களில் வீசிய பலத்த புயலால், 35-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.

நேற்று பிற்பகல் 3 மணி தொடங்கி, சுமார் ஒரு மணி நேரம் பெய்த கனமழையுடன் கூடிய பலத்த காற்றினால், பல வீடுகளின் கூரைகள் பறந்ததுடன், மரங்களும் வேரோடு சாய்ந்தன.

கம்போங் சாங்காட் பாரு மாத்தாங், கம்போங் தெலுக் கெர்த்தாம், கம்போங் மெலாவாத்தி மற்றும் கம்போங் ஹுஜோங் மாத்தாங் ஆகிய நான்கு பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட மக்களுக்காக SK Matang பள்ளியில் நேற்று மாலை 6.30 மணிக்குத் தற்காலிக நிவாரண மையம் திறக்கப்பட்டது.

தொடக்கக் கட்ட தகவலின்படி, 18 குடும்பங்களைச் சேர்ந்த 45 பேர் அந்த மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், 46 குடும்பங்களைச் சேர்ந்த 82 பேர் பாதிக்கப்பட்டவர்களாகப் பதிவுச் செய்யப்பட்டுள்ளனர்.

இதனிடையே, மீட்பு மற்றும் துப்புரவுப் பணிகளுக்காக 12 பொது தற்காப்புப் படை வீரர்கள், 3 வாகனங்கள் மற்றும் 5 மரம் வெட்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்களும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!