Latestமலேசியா

செர்டாங், சுல்தான் இட்ரிஸ் ஷா மருத்துவமனையின் இருதயவியல் துறைத் தலைவராக டத்தோ Dr அஸ்ரி ரங்கா நியமனம்

புத்ராஜெயா, அக்டோபர்-24,சிலாங்கூர், செர்டாங், சுல்தான் இட்ரிஸ் ஷா மருத்துவமனையின் இருதயவியல் துறைத் தலைவராக (Head of Cardiology) டத்தோ Dr அஸ்ரி ரங்கா பின் அப்துல்லா ராமையா முறைப்படி பதவி உயர்வுப் பெற்றுள்ளார்.

​அரசாங்கத் தலைமைச் செயலாளர் தான் ஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பக்கார் இந்த பதவி உயர்வு கடிதத்தை அவருக்கு நேரில் வழங்கி கௌரவித்தார்.

​30 ஆண்டுகளுக்கும் மேலாக சேவை ஆற்றிவரும் Dr அஸ்ரி, சிலாங்கூர் மாநில இருதயவியல் சேவையின் தலைவராகவும், சுகாதார அமைச்சின் தேசிய இருதயவியல் சேவையின் துணைத் தலைவராகவும் பொறுப்பு வகிக்கிறார்.

​இதுவரை 10,000-க்கும் மேற்பட்ட இருதய நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ள இவர், 60-க்கும் மேற்பட்ட உள்ளூர் இருதய நிபுணர்களை உருவாக்கியுள்ளார்.

தேசிய இருதயக் கழகமான IJN உட்பட பல மருத்துவ அமைப்புகள் அவருக்குத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றன.

​நாட்டின் சுகாதாரத் துறைக்குத் தொடர்ந்து பங்காற்றி வரும் டத்தோ Dr அஸ்ரிக்கு சமூக ஊடகங்களிலும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!