Latestமலேசியா

தெலுக் இந்தானில் 11 தமிழ்ப்பள்ளிகளுக்கு RM1.42 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி

தெலுக் இந்தான், நவம்பர்-12,பேராக், தெலுக் இந்தான் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள 11 தமிழ்ப்பள்ளிகளுக்கு மொத்தம் 1.42 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

தீபாவளியை முன்னிட்டு, வீடமைப்பு மற்றும் ஊராட்சித்துறை அமைச்சரும் தெலுக் இந்தான் எம்.பியுமான ஙா கோர் மிங் மற்றும் பாசீர் பெடாமார் சட்டமன்ற உறுப்பினர் வூ கா லியோங் ஆகியோரின் முயற்சியில் இந்த நிதி வழங்கப்பட்டது.

தமிழ்ப்பள்ளிகளின் கல்வி மேம்பாட்டுக்கும், மாணவர்களின் நலனுக்கும் உதவும் நோக்கில் இந்த ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பேராக் ஆட்சிக் குழு உறுப்பினருமான வூ கா லியோங் சொன்னார்.

இவ்வேளையில்,தெலுக் இந்தான் தொகுதியில் உள்ள தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு த் தலா 1,000 ரிங்கிட் கல்வி உதவிகளும் நேரடியாக வழங்கப்பட்டுள்ளன.

இடைநிலைப் பள்ளி மாணவர்களுக்குத் தலா 1,200 ரிங்கிட்டும், பல்கலைக்கழக மாணவர்களுக்குத் தலா 2,000 ரிங்கிட்டும் ஒப்படைக்கப்பட்டன.

கோயில்களுக்கும் வரலாறு காணாத அளவுக்கு நிதி ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டதைச் சுட்டிக் காட்டிய வூ கா லியோங், ஙா கோர் மிங்கிற்குந் நன்றி பாராட்டினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!