Latestமலேசியா

திரெங்கானுவில் பாராங் கத்தியுடன் நகைக்கடையில் கொள்ளை; சந்தேக நபர்கள் இருவருக்குப் போலீஸ் வலைவீச்சு

திரெங்கானு, நவம்பர் 12 – குவாலா திரெங்கானுவிலுள்ள பத்து 6 பகுதியிலிருக்கும் , நகைக்கடையில் பாராங்கத்தியுடன் உள்ளே புகுந்து கொள்ளையடித்த இரு ஆடவர்களைக் காவல்துறை தேடி வருகிறது.

இன்று காலை 10.46 மணியளவில் நடந்த இச்சம்பவத்தில், நான்கு ஊழியர்கள் பணியில் இருந்தபோது, பாராங்கத்தியுடன் கடைக்குள் புகுந்த சந்தேகநபர்கள், மூன்று தட்டுகளில் இருந்த தங்க நகைகளைக் கொள்ளையடித்துத் தப்பினர்.

ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் கொள்ளைச் சம்பவம் நிகழ்ந்ததாக குவாலா திரெங்கானு மாவட்டத் துணைக் காவல்துறைத் தலைவர் வான் முகமட் ஸாக்கி வான் இஸ்மாயில் (Wan Mohd Zaki Wan Ismail) தெரிவித்தார்.

சந்தேகநபர்கள் காரில் தப்பிச் சென்றதாகவும், இச்சம்பவத்தில் ஊழியர்கள் யாரும் காயமடையவில்லை என்றும் அவர் கூறினார். அதே நேரத்தில் கொள்ளையினால் ஏற்பட்ட இழப்பு இன்னும் கணக்கிடப்படவில்லை.

இச்சம்பவம் குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுகிறது. கொள்ளை தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் காவல்துறையைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!