Latestமலேசியா

முதியவரைத் துன்புறுத்திய மூன்று சந்தேகநபர்களின் தடுப்புக்காவல் மேலும் ஆறு நாட்களுக்கு நீட்டிப்பு

நெகிரி செம்பிலான், நவம்பர் 12 – நெகிரி செம்பிலானில், முதியவர் ஒருவரைத் துன்புறுத்தியதில் அவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட இரண்டு பெண்கள் உட்பட மூன்று சந்தேகநபர்களின் தடுப்புக்காவல் மேலும் ஆறு நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

28 முதல் 34 வயதுக்குட்பட்ட மூன்று சந்தேகநபர்களும் கடந்த நவம்பர் 5ஆம் தேதி கைது செய்யப்பட்டு, நவம்பர் 6ஆம் தேதி முதல் ஏழு நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், விசாரணையை முடிப்பதற்காக சிரம்பான் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் காவல்துறை மேற்கொண்ட கோரிக்கையைத் தொடர்ந்து, அவர்களின் தடுப்புக்காவல் நவம்பர் 18ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பிரேதப் பரிசோதனையில், தலையில் ஏற்பட்ட காயங்களே முதியவரின் மரணத்திற்குக் காரணம் என்பது உறுதி செய்யப்பட்டது.

இவ்வழக்கு குற்றவியல் சட்டத்தின் கீழ் கொலை வழக்காக விசாரிக்கப்படுகிறது.

முதியவர் துன்புறுத்தப்படும் காணொளி TikTok-இல் வைரலானதைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. மேலும், அவரது இறுதிச்சடங்கு அவசரமாக நடத்தப்பட்டதும் சந்தேகத்தை ஏற்படுத்தியதால், காவல்துறையின் உதவியுடன் அது தடுத்து நிறுத்தப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!