Latestமலேசியா

தாய்லாந்திலிருந்து கடத்தப்பட்ட 2 டன் அரிசி பறிமுதல் – 22 வயது இளைஞர் கைது

கிளந்தான், நவம்பர் 13 – கிளாந்தான், தும்பாட்டிலுள்ள கம்போங் பூனோஹான் (Kampung Bunohan) பகுதியில், தாய்லாந்திலிருந்து கடத்தி வரப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் இரண்டு டன் அரிசியை காவல்துறையின் PGA 7 படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

நேற்று மாலை 4.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், வீட்டின் அறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 80 மூட்டைகள் அரிசி கைப்பற்றப்பட்டதுடன், வீட்டின் 22 வயது உரிமையாளரும் கைது செய்யப்பட்டார்.

கடந்த ஆண்டு முதல் கடத்தல் அரிசியை வாங்கி, கோத்தா பாருவைச் சுற்றியுள்ள பகுதிகளில் விற்பனை செய்து வந்ததாகச் சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.

மேலும், சட்டவிரோத நுழைவுப் பாதையான பொஹோன் தார் (Pohon Tar) வழியாகக் கொண்டுவரப்பட்ட அரிசியைச் சேகரித்து, காரில் கொண்டு சென்று விநியோகித்ததும் விசாரணையில் தெரியவந்தது.

சுமார் 8,000 ரிங்கிட் மதிப்புள்ள அரிசி, 1994ஆம் ஆண்டு தேசிய நெல் மற்றும் அரிசி கட்டுப்பாட்டுச் சட்டத்தின் 20ஆவது பிரிவின் கீழ் விசாரணைக்காக சம்பந்தப்பட்ட கட்டுப்பாட்டு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!