Latest

கிளந்தானில் சிறார் துன்புறுத்தல்; குடும்ப உறுப்பினர்களும் தொடர்பு*

கோத்தா பாரு, நவம்பர்-14,

கிளந்தானில், இவ்வாண்டின் முதல் 9 மாதங்களில் சிறார் சித்ரவதை மற்றும் புறக்கணிப்பு தொடர்பாக 664 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

 

கோத்தா பாருவில் ஆக அதிகமாக 257 சம்பவங்களும், பாசீர் மாஸில் 62 சம்பவங்களும், குவா மூசாங்கில் 59 சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

 

இந்தச் சம்பவங்களில் பெற்றோர், மாற்றாந்தாய், மாற்றாந்தந்தை, உடன்பிறந்தவர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்களும் சம்பந்தப்பட்டிருப்பதாக மாநில சமூக நல இலாகா தெரிவித்துள்ளது.

 

குடும்பப் பொருளாதார நெருக்கடி, விவாகரத்து மற்றும் போதைப்பொருள் பயன்பாடு போன்றவை இதற்கு முக்கியக் காரணங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

 

அதே சமயம், TikTok மற்றும் Facebook போன்ற சமூக ஊடகங்கள் வழியாக அறிமுகமாகும் அந்நியர்களாலும் சிறுவர்கள் பாதிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

பாதிக்கப்பட்ட சிறுவர்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுவதுடன், அவர்களுக்கு மருத்துவ மற்றும் உளவியல் உதவிகளும் வழங்கப்படுவதாக மாநில சமூக நலத்துறை இயக்குநர் Che Samsuzuki Che Noh தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!