Latestமலேசியா

‘Patik Tak Rela’ கவிதை: Hassan Karim மீது தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் விசாரணை

கோலாலம்பூர், நவ.16-பாசிர் கூடாங் நாடாளுமன்ற உறுப்பினர் Hassn Karim, தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட ‘Patik Tak Rela’ என்ற கவிதை தொடர்பாக, தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

இன்று பிற்பகல் 3 மணிக்கு புக்கிட் அமான் காவல்துறையின் வகைப்படுத்தப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவில் (USJT) முன்னிலையாக அவர் அழைக்கப்பட்டுள்ளார். தேச நிந்தனைச் சட்டத்தின் பிரிவு 4(1) மற்றும் தகவல் தொடர்பு, பல்லூடகச் சட்டத்தின் பிரிவு 233 ஆகியவற்றின் கீழ் விசாரணை நடைபெறவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Hassan எழுதிய அக்கவிதை, நீதி, அநீதிக்கு எதிராகக் குரல் கொடுப்பது, பதவி அல்லது அந்தஸ்தைப் பொருட்படுத்தாமல் சட்டம் அனைவருக்கும் சமமாக அமல்படுத்தப்பட வேண்டியதன் அவசியம் ஆகியவற்றை எடுத்துரைக்கிறது.

அக்கவிதை, மாமன்னரின் ஒப்புதலுக்குப் பிறகு முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் ரசாக், தமது எஞ்சிய சிறைத்தண்டனையை வீட்டுக் காவலில் அனுபவிக்க அனுமதிக்கப்பட்டது தொடர்பான விவகாரத்தைக் குறிப்பிடுவதாகக் கருதப்படுகிறது. மேலும், உண்மையைப் பேசுவதும் அநீதிக்கு எதிராகக் குரல் கொடுப்பதும் தேசத் துரோகமாகுமா எனக் கவிதையில் Hassan கேள்வி எழுப்பியுள்ளார்.

அநீதியைக் கண்டும் காணாமல் மௌனம் காப்பது அதனைத் தொடர அனுமதிப்பதற்குச் சமமா என்றும் அவர் வினவியுள்ளார். “இந்த நாடு இவ்வளவு மோசமான நிலைக்குத் தாழ்ந்து போவதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது” என்ற வரிகளுடன் அக்கவிதை நிறைவடைகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!