Latestமலேசியா

MRT காஜாங் வழித்தடத்தின் சேவை மீண்டும் வழக்கநிலைக்குத் திரும்பியது

கோலாலம்பூர், நவம்பர் 16 – தாமான் சன்டெக்ஸ் (Taman Suntex) நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாகப் பாதிக்கப்பட்ட எம்.ஆர்.டி. (MRT) காஜாங் வழித்தடத்தின் சேவை, இன்று காலை 7.58 மணிக்கு மீண்டும் வழக்கநிலைக்குத் திரும்பியது.

ரேப்பிட் கே.எல். (Rapid KL) வெளியிட்ட அறிக்கையில், கோளாறுக்குள்ளான ரயில், சேவையிலிருந்து அகற்றப்பட்டு, ஆய்வுக்காகப் பணிமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகத் தெரிவித்தது.

இதையடுத்து, பயணிகளின் பயணத்தைத் தொடர உதவுவதற்காக இயக்கப்பட்ட மாற்று ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. ரயில்களின் இடைவெளி படிப்படியாகச் சீரமைக்கப்பட்டு வருவதாகவும், தொழில்நுட்பக் குழுவினர் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபடுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, ரயில் நகர முடியாமல் போனதால் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. சில நிலையங்களில் 22 முதல் 25 நிமிடங்கள் வரை காத்திருக்கும் நேரம் காட்டப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!