Latestமலேசியா

கம்போடியா–தாய்லாந்து அமைதி ஒப்பந்தம்: பிரதமர் அன்வாருக்கு ட்ரம்ப் பாராட்டு

மணிலா, நவம்பர்-18,கம்போடியா மற்றும் தாய்லாந்து இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதில் முக்கியப் பங்காற்றிய பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமை, அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் பாராட்டியுள்ளார்.

பிலிப்பின்ஸ் தலைநகர் மணிலாவில் நேற்று நடைபெற்ற ஆசியான்–அமெரிக்கச் சிறப்பு உச்சநிலை மாநாட்டின் விருந்து நிகழ்ச்சியில் உரையாற்றியபோது, ட்ரம்ப் இதனைத் தெரிவித்தார்.

கடந்தாண்டு மலேசியாவில் நடைபெற்ற ஆசியான் உச்சநிலை மாநாட்டின்போது, தாமும் அன்வாரும் இணைந்து கோலாலம்பூர் அமைதி பிரகடனத்தை ஏற்படுத்தியதை அவர் நினைவுகூர்ந்தார்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம், ஆயிரக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டதோடு, போரினால் இடம்பெயர்ந்த ஏராளமான பொது மக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப முடிந்ததாகவும் டிரம்ப் கூறினார்.

அன்வாரும் கலந்துகொண்ட அந்த நிகழ்ச்சியில், இருநாடுகளுக்கிடையிலான போர் நிறுத்தம் தொடர்ந்து நிலைநிறுத்தப்படுவதை உறுதிச் செய்வதில் அமெரிக்கா உறுதியாக இருப்பதாகவும் ட்ரம்ப் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!