Latestமலேசியா

நஜிப்பை வீட்டுக் காவலில் வைக்க சட்டத்துறைத் தலைவர், அமைச்சர் எதிர்ப்பு; மாமன்னர் ஒப்புதல் அளித்ததாகக் கூறப்படும் ஆவணங்கள்

கோலாலம்பூர், நவ. 18: முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக்கை வீட்டுக் காவலில் வைக்க அனுமதிக்கும் முடிவுக்கு சட்டத்துறைத் தலைவர் மற்றும் பிரதமர் துறையின் கூட்டரசு பிரதேச அமைச்சர் ஹன்னா இயோ எதிர்ப்புத் தெரிவித்ததாகக் கூறப்படும் ஆவணங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளன.

முன்னாள் டாமன்சாரா நாடாளுமன்ற உறுப்பினர் டோனி புவா, மன்னிப்பு வாரியக் கூட்டத்தின் ரகசியக் குறிப்புகள் எனக் கூறப்படும் சில பக்கங்களைப் இன்று தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்தக் குறிப்புகளின்படி, சட்டத்துறைத் தலைவர் டான் ஸ்ரீ முகமட் டுசுக்கி மொக்தார் மற்றும் ஹன்னா இயோ ஆகியோர் நஜிப்பின் எஞ்சிய சிறைத் தண்டனையை வீட்டுக் காவலில் கழிக்க அனுமதிக்கும் யோசனைக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். எனினும், மாமன்னர் தனது அரசியலமைப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி நிபந்தனை மன்னிப்புக்கு ஒப்புதல் அளித்ததாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

50 மில்லியன் ரிங்கிட் அபராதத்தைச் செலுத்திய பின்னர், 2028 ஆகஸ்ட் 23 வரை வீட்டுக் காவலில் தண்டனையை அனுபவிக்க அனுமதிக்கும் முடிவு அந்த ஆவணங்களில் பதிவாகியுள்ளது.

இந்த ஆவணங்கள் செப்டம்பர் 18ஆம் தேதி நடைபெற்ற மன்னிப்பு வாரியத்தின் 64ஆவது கூட்டக் குறிப்புகளிலிருந்து எடுக்கப்பட்டவை எனத் கூறப்படுகிறது. இருப்பினும், அவற்றின் உண்மைத்தன்மையையும் அவை அதிகாரபூர்வமாக ரகசிய நீக்கம் செய்யப்பட்டனவா என்பதையும் பிரதமர் துறை மற்றும் உள்துறை அமைச்சு இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!