Latestமலேசியா

வெள்ளிக்கிழமை தொழுகை, ஆலோசனை அமர்வில் பங்கேற்க மீண்டும் காஜாங் சிறைக்குச் செல்லும் நஜிப்

கோலாலம்பூர்-முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக், நாளை வெள்ளிக்கிழமை தொழுகையை நிறைவேற்றுவதற்காக மீண்டும் காஜாங் சிறைக்குச் செல்லவுள்ளார். அதனைத் தொடர்ந்து, சனிக்கிழமையன்று சிறையில் நடைபெறும் ஆலோசனை அமர்விலும் (sesi kaunseling) அவர் பங்கேற்கவுள்ளதாகத் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்காக, சிறைச்சாலையின் தொழுகை அறையில் அவர் வெள்ளிக்கிழமை தொழுகையை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகளைச் சிறைத்துறை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மறுநாள் சிறையில் நடைபெறும் அல்-குர்ஆன் (al-Quran) ஓதும் வகுப்பு மற்றும் ஆலோசனை அமர்விலும் அவர் பங்கேற்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த வாரமும் நஜிப் காஜாங் சிறையில் வெள்ளிக்கிழமை தொழுகையை நிறைவேற்றினார். SRC International வழக்கில் எஞ்சிய சிறைத்தண்டனையை வீட்டுக் காவலில் அனுபவிக்க அனுமதி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, ஜாலான் லங்காக் டூட்டாவில் (Jalan Langgak Duta) உள்ள தனது இல்லத்திலிருந்து அவர் முதன்முறையாக வெளியேறியது அதுவே ஆகும்.
இதற்கிடையில், SRC International வழக்கில் விதிக்கப்பட்ட 50 மில்லியன் ரிங்கிட் அபராதத்தைச் செலுத்தியதைத் தொடர்ந்து, நஜிப் 2028ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் தேதி வரை வீட்டுக் காவலில் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!