Latestமலேசியா

வாகனப் பாகங்கள் கிடங்கில் தீ – 90 விழுக்காடு பகுதி தீக்கிரை

கோலாலம்பூர், நவம்பர் 20 – கோலாலம்பூர், ஜாலான் சான் சோ லின் (Jalan Chan Sow Lin) அருகேயுள்ள ஜாலான் உத்துசானில் (Jalan Utusan) அமைந்துள்ள வாகனப் பாகங்கள் கிடங்கில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், அக்கிடங்கின் சுமார் 90 விழுக்காடு பகுதி தீக்கிரையானது.

இன்று அதிகாலை 5.53 மணிக்கு தீ விபத்து தொடர்பான அவசர அழைப்பு கிடைத்ததைத் தொடர்ந்து, புடு (Pudu) தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த வீரர்களுடன் மேலும் ஆறு தீயணைப்பு நிலையங்களின் குழுவினரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

காலை 6.03 மணிக்கு முதலாவது தீயணைப்பு வாகனம் சம்பவ இடத்தைச் சென்றடைந்தபோது, கிடங்கு முழுவதும் தீ பரவியிருந்தது. சுமார் 70க்கு 150 அடி பரப்பளவைக் கொண்ட அக்கிடங்கில் ஏற்பட்ட தீ, காலை 7.03 மணியளவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

தீயை அணைக்கும் பணியில் மொத்தம் 75 தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டதுடன், தீ அருகிலுள்ள கட்டிடங்களுக்குப் பரவாமல் தடுப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இச்சம்பவத்தில் இதுவரை உயிரிழப்போ காயமோ எதுவும் பதிவாகவில்லை. தீயை முழுமையாக அணைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!