Latestமலேசியா

புஞ்சாக் ஜெலாப்பாங் நீர்வீழ்ச்சியில் திடீர் வெள்ளம் – 21 வயது ஸ்நேகா பலி, மூவர் உயிர் தப்பினர்

ஈப்போ, நவ. 22 – பேராக், மேரு ராயாவில் உள்ள புஞ்சாக் ஜெலாப்பாங் நீர்வீழ்ச்சியில் நேற்று ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கிய நால்வரில், 21 வயது ஸ்நேகா புவனேசன் நீரில் மூழ்கி உயிரிழந்தார். மற்ற மூவரும் உயிர் தப்பினர்.

ஸ்நேகா வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இடத்திலிருந்து சுமார் 1.5 கிலோமீட்டர் தொலைவில், இன்று காலை 8.10 மணியளவில் அவரது உடலைப் பொதுமக்கள் கண்டனர். அவரது உடல் மரத்தில் சிக்கியிருந்ததாகப் பேராக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டுப் பிரிவு உதவி இயக்குநர் சபரோட்ஸி நோர் அகமட் தெரிவித்தார்.

ஆற்றின் மறுகரையில் இருந்த 22 வயது ஷமாலா முனியாண்டியைத் தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். ஆற்றங்கரைக்கு அருகில் இருந்த 23 வயது தசிவரன் விஜயகுமாரும் மீட்கப்பட்டார். வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 22 வயது மகேஷ் ரகு தானாகவே தப்பினார்.

ஸ்நேகாவின் உடலை மீட்ட தீயணைப்பு வீரர்கள், மேல் நடவடிக்கைக்காக அதனைக் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். மீட்புப் பணி இன்று காலை 9.25 மணியளவில் நிறைவடைந்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!