Latestமலேசியா

2026 ஆசிய வல்லரசு பட்டியலில் மூன்றாவது இடத்தைத் தக்க வைத்த இந்தியா

புது டெல்லி, நவம்பர்-25,ஆசியாவில் வலிமைமிக்க நாடுகள் பட்டியலில் இந்தியா தொடர்ந்து மூன்றாவது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.

ஆஸ்திரேலியாவின் Lowy ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள 2026-ஆம் ஆண்டுக்கான ஆசிய வல்லமை குறியீட்டில் இது தெரியவந்துள்ளது.

ஆசியாவில் ஒட்டுமொத்தமாக வலிமையோடு இருக்கும் நாடுகளில் அமெரிக்காவும் சீனாவும் மட்டுமே இந்தியாவை விட முன்னிலையில் உள்ளன.

ஜப்பானும் ரஷ்யாவுமே இந்தியாவுக்கு அடுத்து நான்காவது ஐந்தாவது இடங்களில் தான் உள்ளன.

கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்தியாவின் ஒட்டுமொத்த வலிமை மதிப்பீடு அதிகரித்துள்ளது.

அதிலும் குறிப்பாக, 2018-ஆம் ஆண்டு இந்த ஆய்வு அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வல்லமை இடைவெளி தற்போது மிகக் குறைந்த அளவை எட்டியுள்ளது.

இவ்வேளையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வட்டார தலைமைத்துவம் குறித்த நிபுணர்களின் மதிப்பீட்டிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் பதிவாகியுள்ளது.

3 இடங்கள் முன்னேறி, சீன அதிபர் ஸீ சின் பிங்கிற்கு அடுத்து இரண்டாது மிக ஆக்ககரமான வட்டாரத் தலைவராக மோடி உருவெடுத்துள்ளார்.

இதனிடையே, பொருளாதாரத் திறனில் இந்தியா சிறிய பின்னடைவைச் சந்தித்திருந்தாலும், தற்காப்பு ஒத்துழைப்பு, கலாசாரச் செல்வாக்கு மற்றும் வட்டார வர்த்தக உறவுகளில் முன்னேற்றம் கண்டுள்ளது.

பொருளாதாரம், இராணுவ வலிமை, அரசதந்திரச் செல்வாக்கு உள்ளிட்ட 131 அம்சங்களின் அடிப்படையில் 27 நாடுகளும் பிரதேசங்களும் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!