Latestமலேசியா

DAP அமைச்சர்கள் அனைவரையும் நீக்க வேண்டும் – தக்கியுடீன் வலியுறுத்து

கோலாலம்பூர், நவம்பர் 12 – முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கிற்கு வழங்கப்பட்ட அரச மன்னிப்பு மற்றும் வீட்டுக் காவல் உத்தரவு தொடர்பாகக் கேள்வி எழுப்பியதாகக் கூறி, டிஏபி (DAP) அமைச்சர்கள் அனைவரையும் பதவியிலிருந்து நீக்க வேண்டுமென பெரிக்காத்தான் நேஷனல் (PN) பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ தக்கியுடீன் ஹசான் (Takiyuddin Hassan) வலியுறுத்தியுள்ளார்.

நஜீப் வீட்டிற்குத் திரும்ப அனுமதிக்கப்பட்டால் பதவி விலகுவதாக அறிவித்த டிஏபி பொதுச் செயலாளர் அந்தோனி லோக் (Anthony Loke) மட்டும் ஏன் பதவி விலக வேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

மேலும், டிஏபி அமைச்சர்கள் அனைவரையும் அமைச்சரவையிலிருந்து நீக்குமாறு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு (Anwar Ibrahim) அவர் சவால் விடுத்தார்.

இதற்கிடையில், நஜீப் கடந்த செவ்வாய்க்கிழமை காஜாங் சிறையிலிருந்து தாமான் டூத்தாவிலுள்ள தனது இல்லத்திற்கு மாற்றப்பட்டு, 2028 ஆகஸ்ட் 23ஆம் தேதி வரை எஞ்சிய சிறைத்தண்டனையை வீட்டுக் காவலில் அனுபவிக்க அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!