Latestமலேசியா

DASH நெடுஞ்சாலையில் எதிர்திசையில் சென்ற பெண் ஓட்டுநர் – வாகன ஓட்டிகள் விரைந்து தடுத்தனர்

கோலாலம்பூர், மே 19 – டாமான்சாரா ஷா ஆலம் (Damansara-Shah Alam) நெடுஞ்சாலையில் (DASH) பெண் ஒருவர் எதிர்திசையில் காரை ஓட்டிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் வைரலான வீடியோவில், அந்த பெண் மூன்று பாதைகள் கொண்ட நெடுஞ்சாலையில் எதிர்திசையில் பயணித்தது பதிவாகியுள்ளது. இதையடுத்து, எதிரே வந்த வாகனமோட்டிகள் விளக்குகளை ஒளிரச்செய்தும், ஹார்ன் அடித்தும் எச்சரித்தனர்.

வெள்ளை நிற கார் ஓட்டுநர் ஒருவர், அந்த பெண்ணின் காருடன் அருகில் சென்று அவர் தவறான திசையில் செல்கிறார் என்பதை சைகை மூலம் தெரிவிக்க முயன்றார். மேலும், மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் ஆபத்தை எச்சரித்து ஹார்ன் அடித்தார். அதன் பின்னர்தான், அந்த வாகனம் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டது.

இந்த வீடியோவை தொடர்ந்து, வயதான ஓட்டுநர்களின் வாகனமோட்டும் தகுதி மற்றும் உரிமங்களை மீளாய்வு செய்ய வேண்டும் என்று சில சமூக வலைத்தள பயனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!