Latestமலேசியா

EPF கணக்கு இருப்பை சமூக ஊடகங்களில் பகிர வேண்டாம் ; பொதுமக்களுக்கு ஊழியர் சேம நிதி வாரியம் அறிவுறுத்தல்

பெட்டாலிங் ஜெயா, மே 14 – EPF எனப்படும் ஊழியர் சேம நிதி கணக்கு இருப்பு அல்லது விவரங்களின் “ஸ்கிரீன் ஷாட்களை” சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யவோ, பகிரவோ வேண்டாம் என பொதுமக்களுக்கு நினைவூட்டப்பட்டுள்ளது.

அது போன்ற செயல்கள் இழப்புக்கு வழிவகுக்கலாம். மோசடி நடவடிக்கைகளுக்கு இட்டுச் செல்லலாம் என, தனது இன்ஸ்டாகிராம் பதிவு வாயிலாக EPF எச்சரித்துள்ளது.

“உங்களின் நடவடிக்கைகளை மோசடிக்காரரர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். வழிய சென்று சிக்கிக் கொள்ளாதீர்கள். கவனமாக இருங்கள்” என அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அண்மையில் அரசாங்கம் அறிவித்த EPF கணக்கு ஒருங்கிணைப்பு திட்டதை அடுத்து, அதன் சந்தாதாரர்கள் சிலர் தங்கள் கணக்கு விவரங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

குறிப்பாக, அதிக சேமிப்பை கொண்டுள்ள சிலர், அது தொடர்பான “ஸ்கிரீன் ஷாட்களை” பகிர்ந்து வருவது தெரிய வந்துள்ளது.

அதில் குறிப்பாக, ஐந்து லட்சம் ரிங்கிட் சேமிப்பை குறிக்கும் “ஸ்கிரீன் ஷாட்டை”, X சமூக ஊடக பயனர் ஒருவர் பதிவேற்றம் செய்துள்ளது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!