
கோலாலம்பூர், ஜூன் 30 – வீட்டின் சுவர் மீது உணவை வைக்குமாறு தெளிவாகக் குறிப்பிட்டிருந்தும், தனது GrabFood ஆர்டரை குப்பைத்தொட்டியின் அருகே வைத்து சென்றதாக ஒரு வாடிக்கையாளர் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உணவின் சுகாதாரம் மற்றும் தூய்மையைப் புறக்கணிக்கும் வகையிலான இந்தச் செயல் ஏற்றுக்கொள்ள முடியாதது என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் டெலிவரி சேவையில் கூடுதல் பொறுப்புணர்வு அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.



