
வெளிநாட்டினர் மற்றும் ரோஹிங்கியா அகதிகள் பலர் JPN அலுவலகத்திற்கு வந்தது MyKad பெறுவதற்காகவே என சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவலை தேசியப் பதிவுத் துறையான JPN மறுத்துள்ளது.
வெளிநாட்டினருக்கான பல்வேறு பதிவு மற்றும் ஆவணச் சேவைகள் அங்கு வழங்கப்படுகின்றன. அதில், பெற்றோரின் குடியுரிமையைப் பொருட்படுத்தாமல் குழந்தைகளின் பிறப்பைப் பதிவு செய்வதும் உள்ளடங்கும் என்றும் JPN விளக்கமளித்துள்ளது.
மலேசியாவில் பிறப்பு பதிவு செய்யப்பட்டதற்கான ஆதாரமாக வழங்கப்படும் இளஞ்சிவப்பு பிறப்புச் சான்றிதழ், அந்தக் குழந்தை தானாகவே மலேசியக் குடியுரிமை பெற்றது என்று அர்த்தமல்ல. வெளிநாட்டினருக்கும் இந்தச் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
எனவே, JPN அலுவலகத்தில் ஒருவர் இருப்பதை மட்டும் வைத்து அவர் MyKad பெற வந்ததாக முடிவு செய்ய வேண்டாம் என JPN பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.



