
ஜோகூர் பாரு, ஆகஸ்ட் – 06-ஜோகூரில் Kulai மற்றும் Kempas Baruவுக்கு இடையே ரயில் தண்டவாளத்தில் லாரி ஒன்று சறுக்கி விழுந்ததை அடுத்து, ETS ரயில் சேவை பயணிகளுக்கு மாற்று வழி ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது.
அவர்கள் JB Sentral மற்றும் Kempas Baru நிலையங்களிலிருந்து Kulai நிலையத்திற்கு shuttle பேருந்துகள் மூலம் அழைத்துச் செல்லப்படுவார்கள். அங்கிருந்து அவர்கள் தங்கள் இடங்களை நோக்கி ரயிலில் பயணத்தைத் தொடரலாம் என KTMB நிறுவனம் அறிவித்துள்ளது.
பயணத்தைத் தொடர விரும்பாத பயணிகளுக்கு, கட்டணம் முழுமையாகத் திரும்ப வழங்கப்படும். பயணிகள் நிலையங்களில் உள்ள KTMB ஊழியர்களிடமிருந்து கூடுதல் உதவிகளைப் பெறலாம் என அது தெரிவித்தது.
இன்று காலை மூன்று ETS சேவைகள் தடைபட்டன. ‘Shuttle Selatan’ சேவையில், Pasir Gudang–JB Sentral–Pasir Gudang மற்றும் Kempas Baru–JB Sentral–Kempas Baru ஆகிய வழித்தடங்கள் செயல்படுகின்றன. ஆனால் Kulai–Kempas Baru–Kulai வழித்தடம் செயல்படவில்லை.
இரு தண்டவாளங்களிலும் ஏற்பட்ட சேதங்களைச் சேர்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாக KTMB மேலும் கூறியது. அவ்வழித் தடம் எப்போது மீண்டும் திறக்கப்படும் என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை.
நேற்று, Kulai-Kempas வழித்தடத்தில், எளிதில் தீப்பற்றக்கூடிய திரவத்தை ஏற்றிச் சென்ற லாரி ஒன்று தண்டவாளத்திற்கு அருகில் சறுக்கிச் சென்றதால் மின்சார விநியோகம் தடைபட்டது. அதனால் Shuttle Selatan மற்றும் ETS சேவைகளில் தாமதம் ஏற்பட்டது.



