Latestமலேசியா

‘MediAsas’ புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் அறிமுகம்; ஜூலை இறுதியில் கிள்ளான் பள்ளத்தாக்கில் முன்னோடித் திட்டம் தொடக்கம்

கோலாலாம்பூர், ஜூலை-7 – மலேசியர்களுக்கு மலிவு விலையில் தனியார் மருத்துவப் பாதுகாப்பை வழங்கும் நோக்கில், MediAsas என்ற புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.

நாட்டின் சுகாதார மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ள இந்த காப்பீடு, MediAsas Teras என்ற அடிப்படைத் திட்டமாகவும், MediAsas Fleksi என்ற கூடுதல் பலன்களைக் கொண்ட திட்டமாகவும் 2 அடுக்குகளாகச் செயல்படும்.

இதன் முதற்கட்ட முன்னோடித் திட்டம், இந்த ஜூலை மாத இறுதியில் தொடங்கி அக்டோபர் மாதம் வரை கிள்ளான் பள்ளத்தாக்கில் நடத்தப்படவுள்ளது.

இதில் நாட்டின் முன்னணி 6 காப்பீட்டு நிறுவனங்களும், தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவமனைகளும் இணையவுள்ளன.

இந்தத் திட்டத்திற்கான மாதாந்திர பிரீமியம் 60 ரிங்கிட் முதல் 550 ரிங்கிட் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

70 வயது வரை உள்ளவர்கள் இதில் இணைய முடியும் என்பதோடு, 85 வயது வரை இதற்கான மருத்துவப் பாதுகாப்பைப் பெற முடியும்.

தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கான கட்டணங்களைக் கட்டுக்குள் வைத்திருக்கவும், காப்பீட்டுச் செலவினங்களைச் சமநிலைப்படுத்தவும் புதிய மருத்துவக் கட்டண முறை (DRG Billing System) படிப்படியாக அமுல்படுத்தப்படும் என்று சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ Dr சுல்கிப்ளி அஹ்மாட் தெரிவித்துள்ளார்.

இந்த முன்னோடித் திட்டத்தின் முடிவுகளைக் கொண்டு, காப்பீட்டு நடைமுறைகள் மேலும் சீரமைக்கப்பட்டு, வரும் 2027 ஜனவரி முதல் இத்திட்டம் நாடு முழுவதும் முழுமையாக அமலுக்கு வரவுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!