
கோலாலம்பூர், நவ-03-தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, Sunway Theme Parksசில் நவம்பர் 2 முதல் 10ஆம் தேதி வரை பல்வேறு சிறப்பு கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் இணைந்து பண்டிகையைக் கொண்டாடும் வகையில், மகிழ்ச்சியும் வண்ணமயமான நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதன் சிறப்பம்சமாக, நவம்பர் 8ஆம் தேதி இரு இடங்களில் கண்கவர் வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. Sunway Lagoonனில் இரவு 9.27 மணிக்கும், Sunway Lost World Of Tambunனில் இரவு 10.30 மணிக்கும் வாணவேடிக்கை இடம் பெறவுள்ளது.
Sunway Theme Parks உறுப்பினர்கள் இந்நிகழ்வுகளில் இலவசமாக கலந்து கொள்ளலாம். தீபாவளிக் கொண்டாட்டங்கள் மற்றும் இதர சுவாரஸ்யமான நிகழ்ச்சிகள் குறித்த கூடுதல் தகவல்களுக்கு @sunwaylagoonmalaysia என்ற சமூக ஊடகப் பக்கத்தை வலம் வரலாம்.



