
வாஷிங்டன், நவம்பர்-3,ஈரானுடன் மீண்டும் போர் வெடிப்பதைத் தவிர்ப்பதற்கான அரசதந்திரப் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
வரவிருக்கும் அமெரிக்க இடைக்காலத் தேர்தலுக்கு முன்னதாகப் பேசிய அவர், தெஹ்ரானுடன் ஓர் ஒப்பந்தம் எட்டப்பட வாய்ப்புள்ளது என்றும், ஈரான் விரைவான தீர்வை விரும்புவதாகவும் கூறிக் கொண்டார்.
துணை அதிபர் ஜே.டி. வான்ஸும் இந்த ஒப்பந்தத்தை எட்டுவதில் தங்களுக்கு நம்பிக்கை இருப்பதாக உறுதிப்படுத்தினார்.
இதற்கிடையில், கட்டார் மற்றும் பாகிஸ்தான் போன்ற மத்தியஸ்தர்கள் மூலமாக தீவிரமான மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதை ஈரான் ஒப்புக்கொண்டுள்ளது.
மேலும், சில குறிப்பிட்ட நிபந்தனைகளின் அடிப்படையில் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்கத் தயாராக இருப்பதாகவும் ஈரான் அறிவித்துள்ளது.
இந்த நகர்வுகள் உலகளாவிய சந்தைகளில் உடனடியாக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
8 மாத கால மோதலுக்கு ஒரு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையால், கச்சா எண்ணெய் விலை 7 விழுக்காட்டுக்கும் அதிகமாக சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.



