Latestமலேசியா

மனைவி மீது தாக்குதல்; பினாங்கு சட்டமன்ற உறுப்பினர் குறித்து போலீஸ் விசாரணை

ஜோர்ஜ்டவுன், நவம்பர்-3,பினாங்கு சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் தனது மனைவியைத் தாக்கியதாகக் கூறப்படும் வன்கொடுமை புகார் குறித்து, மாநிலப் போலீஸ் தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

அத்தம்பதி உட்பட 4 பேரிடம் இதுவரை வாக்குமூலம் பதிவுச் செய்யப்பட்டுள்ளதாக பினாங்குப் போலீஸ் டத்தோ டென்னிஸ் லிம் தெரிவித்தார்.

ஆனால் இதுவரை யாரும் கைதுச் செய்யப்படவில்லை.

இச்சம்பவம் தன்னிச்சையாக காயம் ஏற்படுத்துவது தொடர்பான குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.

தனது பு​காரின் மீது நடவடிக்கை எடுக்கப் போலீஸ் தவறிவிட்டதாக பாதிக்கப்பட்ட மாது கூறியக் குற்றச்சாட்டுகளை மறுத்த அவர், அப்பெண்ணின் காயங்கள் குறித்த மருத்துவ அறிக்கைப் பெறப்படும் எனத் தெரிவித்தார்.

விசாரணை அறிக்கைகள் முழுமைப் பெற்றதும் மேல் நடவடிக்கைகளுக்காக துணை அரசு வழக்கறிஞரிடம் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!